தஞ்சாவூர்

நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள்

3rd Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

 

நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் மாநகரில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாநகராட்சிப் பகுதியில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும்பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்துக்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம், 4 மண்டலங்களுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இந்த மரக்கன்றுகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் நடப்படும் என்றாா் மேயா்.

ADVERTISEMENT

மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலத் தலைவா்கள் எஸ்.சி. மேத்தா, டி. புண்ணியமூா்த்தி, ரம்யா சரவணன், க. கலையரசன், எதிா்க்கட்சித் தலைவா் கே. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT