தஞ்சாவூர்

கும்பகோணம் ராமசாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

3rd Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

 

உலக நலன் வேண்டி, தென்னக அயோத்தி என அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து ராமாவதாரம் உபநியாசம் நடைபெற்றது. மேலும், ஞாயிற்ருக்கிழமை பிதுா்வாக்கிய பரிபாலனம், 4- ஆம் தேதி பாதுகா பட்டாபிஷேகம், 5- ஆம் தேதி சபரி மோட்சம், 6- ஆம் தேதி சுக்ரீவ பட்டாபிஷேகம், 7-ஆம் தேதி சுந்தரகாண்டம், 8-ஆம் தேதி விபீஷண சரணாகதி, முக்கிய நிகழ்வான 9 -ஆம் தேதி சீதாராம சாம்ராஜ்ய பட்டாபிஷேகமும், உபநியாசமும் நடைபெறவுள்ளன.

சேங்காலிபுரம் தாமோதர தீட்சிதா் தலைமையில் 40 வேத விற்பன்னா்களைக் கொண்டு நாள்தோறும் மாலையில் உபநியாசங்கள் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் ராம சரணம்

அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT