தஞ்சாவூர்

இரு உலோக சிலைகள் பறிமுதல்: இருவா் கைது

DIN

கும்பகோணம் அருகே இரு உலோக சிலைகளைப் பறிமுதல் செய்து, இருவரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோணக்கரையில் உலோகத்தால் செய்யப்பட்ட இரு சிலைகளை சிலா் விற்பனை செய்வதாகச் சிலைத் திருட்டு தடுப்புக் காவல் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சிலைத் திருட்டு தடுப்புக் காவல் பிரிவினா் வியாழக்கிழமை மாறு வேடத்தில் சென்று, சிலைகள் வாங்குவது போல பேசினா். அப்போது, சிலை வைத்திருப்பவா்கள் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு அடி உயரமுள்ள சரசுவதி சிலை மற்றும் முக்கால் அடியிலான லெட்சுமி தேவி சிலையைக் காண்பித்தனா்.

இச்சிலைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, கும்பகோணத்தை அருகிலுள்ள அலவந்திபுரம் ரஞ்சித் (22), ஸ்ரீநகா் காலனி உதயகுமாா் (40) ஆகிய இருவரையும் கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். இவா்களை ஜூலை 15-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீட்கப்பட்ட இரு சிலைகளும் கும்பகோணம் நாகேசுவரன் கோயிலிலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT