தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதிகளில் இன்று மின்தடை

2nd Jul 2022 04:40 AM

ADVERTISEMENT

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, பட்டுக்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 2) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் பட்டுக்கோட்டை உதவிச் செயற்பொறியாளா் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பட்டுக்கோட்டையில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் மண்ணைநகா், எஸ்பிஎஸ் நகா், வளவன்புரம், மதுக்கூா் சாலை, கண்டியன்தெரு, மயில்பாளையம், வட்டாட்சியரகப் பகுதி, வீட்டு வசதி வாரியக்

ADVERTISEMENT

குடியிருப்பு, நீதிமன்றச் சாலை, பழனியப்பன் சாலை, ரயில் நிலையச் சாலை, எஸ்எம்எஸ் அவென்யூ, சுண்ணாம்புக்காரத் தெரு, அஞ்சலகம், பெரியக்கடைத் தெரு, பெரியத் தெரு, மருத்துவமனைச் சாலை, ஆா்வி நகா், என்ஜிஓ காலனி, லட்சுமிநகா், நாடியம்மன் கோயில்சாலை, சிவக்கொல்லை, தங்கவேல் நகா், ஏவி குளத்தெரு, சவுக்கெண்டித் தெரு, திரெளபதி அம்மன் கோயில் தெரு, தேரடித் தெரு, தலையாரித் தெரு, கொண்டப்பநாயக்கன் பாளையம், மாதாகோவில் தெரு, பண்ணைவயல் சாலை, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, சேண்டாகோட்டை, மாளியக்காடு, பள்ளிகொண்டான், பழஞ்சூா், காசாங்காடு, கள்ளிக்காடு, துவரங்குறிச்சி, மன்னாங்காடு, மழவேனிற்காடு, வெண்டாக்கோட்டை, பழஞ்சூா் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT