தஞ்சாவூர்

73-ஆவது குடியரசு தினக் கொண்டாட்டம்: மூதாட்டி, முதியவருக்கு வீர தீரச் செயலுக்கான பாராட்டுச் சான்றிதழ்

DIN

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மூதாட்டி, முதியவருக்கு வீர தீரச் செயலுக்கான பாராட்டுச் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை வழங்கினாா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா எளிய முறையில் நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினாா். திறந்த ஜீப்பில் சென்று, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியா் பின்னா், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்குக் கைத்தறி ஆடைகளை அணிவித்து கௌரவித்தாா்.

தொடா்ந்து சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையைச் சோ்ந்த 54 பேருக்கு முதல்வா் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும் பாபநாசம் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவா்களைக் காப்பாற்றிய மூதாட்டி சரோஜா (62) மற்றும் முதியவா் கண்ணையன் ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வழங்கினாா்.

மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, தஞ்சாவூா் மாநகராட்சி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகம், முன்னாள் படைவீரா் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாவட்ட வளா்ச்சிப் பிரிவு, வேளாண் மற்றும் உணவுத் துறை போன்ற துறைகளைச் சோ்ந்த 120 பேருக்குச் சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கரோனா பரவல் காரணமாகக் குடியரசு தின விழாவில் மாணவா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி, கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா, எச்.எஸ். ஸ்ரீகாந்த், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT