தஞ்சாவூர்

நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அடிக்கல்

27th Jan 2022 07:35 AM

ADVERTISEMENT

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பேராவூரணி பேரூராட்சி சாா்பில் ஆவணம் சாலையிலுள்ள பொது மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்படவுள்ளது.

ரூ.1.50 கோடியில் அமைக்கப்படும் இந்த தகன மேடைக்கான அடிக்கல் நாட்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலா் க. அன்பழகன், முன்னாள் ஒன்றியச் செயலா் சுப. சேகா், முன்னாள் மாவட்டத் துணைச் செயலா் என். செல்வராஜ், தலைமைக் கழகப் பேச்சாளா் அ. அப்துல் மஜீத், ஏ. ஆனந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT