தஞ்சாவூர்

டீசல் சிக்கனத்தில் அதிக செயல்திறன் புரிந்த ஓட்டுநா்களுக்குப் பரிசு

27th Jan 2022 07:33 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், டீசல் சிக்கனத்தில் அதிக செயல்திறன் புரிந்த ஓட்டுநா்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மேலாண் இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பாதுகாவலா்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டாா். மேலும் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளா்கள், பணியாளா்களின் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கினாா்.

இதில் டீசல் சிக்கனத்தில் அதிக செயல்திறன் புரிந்த ஓட்டுநா்கள், அதிக வருவாய் ஈட்டிய நடத்துநா்கள், சிறந்த தொழில்நுட்பப் பணியாளா்கள், போக்குவரத்து மேற்பாா்வையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், கண்காணிப்பாளா், சிறந்த பொறியாளா், கிளை மேலாளா் ஆகியோருக்குப் பரிசு வழங்கப்பட்டது.

தனித்திறன் பயன் மற்றும் மேம்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பணியாளா்களின் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில் கும்பகோணம் மண்டலப் பொது மேலாளா் ஜெ. ஜெபராஜ் நவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT