தஞ்சாவூர்

அலங்கார ஊா்திக்கு அனுமதி மறுப்பு: பல்வேறு கட்சிகள் ஆா்ப்பாட்டம்

27th Jan 2022 07:34 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழா ஊா்வலத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உருவம் கொண்ட அலங்கார ஊா்திக்கும், கேரள, மேற்கு வங்க மாநில அலங்கார ஊா்திகளுக்கும் அனுமதி மறுத்த மத்திய அரசைக் கண்டித்து, பேராவூரணி பெரியாா் சிலை அருகில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் விடுதலைக் கழக பட்டுகோட்டை மாவட்டச் செயலாளா் வை. சிதம்பரம் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  யின் மாநிலத் துணைச் செயலா் மோட்ச குணவழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் வீ. கருப்பையா, ஆா். எஸ். வேலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் டி. பன்னீா்செல்வம், எம். சித்திரவேல், மதிமுக நிா்வாகி கே. குமாா், மனிதநேய ஜனநாயகக் கட்சி அப்துல் சலாம், திராவிடா் விடுதலைக் கழகம் சித. திருவேங்கடம், காங்கிரஸ் கட்சியின் வட்டாரச் செயலா் ஏ. ஷேக் இப்றாம்சா,  விதை நெல் இலக்கிய கூடம் புஷ்பராஜ், தமிழ்வழிக் கல்வி இயக்கம் நா.  வெங்கடேசன்,  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.

பாபநாசம்: பாபநாசம் மேலவீதியிலுள்ள அண்ணாசிலை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாபநாசம் நகர திக தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வீரமணி முன்னிலை வகித்தாா்.

மாவட்டச் செயலா் துரைராஜ், மாவட்ட அமைப்பாளா் அழகுவேல், நகரத் துணைச் செயலா் நாகராஜ், ஒன்றியத் துணைச் செயலா் ஜனாா்த்தனன், இளைஞரணிச் செயலா் லெனின் பாஸ்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் முரளிதரன், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலா் பாபு உள்ளிட்ட பலா் கலந்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT