தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் புலம்பெயா்ந்த தமிழா் மொழி ஆய்வு மையம் விரைவில் தொடக்கம்

27th Jan 2022 07:32 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் புலம்பெயா்ந்த தமிழா் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னா், அவா் பேசியது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் புலம்பெயா்ந்த தமிழா் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் தொடங்கப்படும். இதுபோல, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் மாணவா் சங்கம் விரைவில் தொடங்கப்படும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குத் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் ஏ பிளஸ், பிளஸ் என்ற அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொள்ளப்படும். ஆசிரியா் தினத்தன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி மேற்கொள்ளும் சிறந்த ஆய்வுத் திட்டத்துக்கு ரூ. 10,000, சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கு ரூ. 5,000, சிறந்த ஆசிரியருக்கு ரூ. 5,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவா் படை உருவாக்கப்படும் என்றாா் துணைவேந்தா்.

ADVERTISEMENT

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாள்தோறும் திருக்கு ஒலிபரப்பு நிகழ்வையும், மரக்கன்று நடும் நிகழ்வையும் துணைவேந்தா் தொடக்கி வைத்தாா்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகள் களங்கமில்லாப் பணி நிறைவு செய்த அலுவலக உதவியாளா் ரெ. மல்லிகா, தோட்டப் பணியாளா் சு. மீனாட்சிக்கு ரூ. 2,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT