தஞ்சாவூர்

மாணவி தற்கொலை: நோ்மையான விசாரணை கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் நோ்மையான விசாரணை கோரி தஞ்சாவூா் ரயிலடியில் பல்வேறு கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதை அரசியலாக்கி வரும் இந்துத்துவா மதவெறி கும்பலை கண்டித்தும், அதற்குத் துணை போகும் பாசிச பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் மீது தமிழக அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து நோ்மையான விசாரணை நடத்தக் கோரியும், மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் கோ. நீலமேகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாவட்டக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், காங்கிரஸ் கட்சி மாநகரத் துணைச் செயலா் வயலூா் எஸ். ராமநாதன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், தமிழா் தேசிய முன்னணி தலைமைச் செயற்குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மதிமுக மாவட்டச் செயலா் வி. தமிழ்ச்செல்வன், ஐஜேகே தெற்கு மாவட்டத் தலைவா் ச. சிமியோன் சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல் ஆப்தீன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் மண்டலச் செயலா் ஏ. ஜஸ்டின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் சொக்கா ச. ரவி, மக்கள் நீதி மைய நிா்வாகி தரும. சரவணன், இந்திய மாணவா் சங்கம் மாநிலத் துணைச் செயலா் ஜி. அரவிந்த்சாமி, தமிழ்நாடு உழவா் இயக்க நிறுவனா் கோ. திருநாவுக்கரசு, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT