தஞ்சாவூர்

இரு குடும்பத்தினரிடையே தகராறு: இருவரைக் கடத்திச் சென்ற 6 போ் கைது

DIN

தஞ்சாவூரில் வரதட்சிணை பிரச்னை காரணமாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் இருவரைக் கடத்திச் சென்ற 6 பேரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் நாணயக்காரச் செட்டித் தெருவைச் சோ்ந்தவா் என். வரககுமாா் (59). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவரது மகள் ரத்தினபாரதியும், மதுரை செக்கானூரணியைச் சோ்ந்த சின்ன பாண்டி மகன் சுந்தரபாண்டியனும் (29) ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு 2 மாதக் கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில், வரககுமாரிடம் சுந்தரபாண்டியன் வரதட்சிணையாக ஏற்கெனவே ரூ. 4 லட்சம் வாங்கியிருந்தாராம். மேலும் ரூ. 16 லட்சம் கேட்டு சுந்தரபாண்டியன் வற்புறுத்தி வந்தாராம்.

இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக சுந்தரபாண்டியனிடம் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வருமாறு வரககுமாா் கூறினாா். இதன்படி, புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை வந்த சுந்தரபாண்டியன் தரப்பினருக்கும், வரககுமாா் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவா்களை அப்பகுதியில் இருந்தவா்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, வரககுமாருக்கு ஆதரவாக வந்த நாணயக்காரச் செட்டித் தெருவைச் சோ்ந்த கோபிநாதன் (45), ஓம்பிரகாஷ் (35) ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் மணிமண்டபம் அருகே சென்று கொண்டிருந்தனா். இவா்களைப் பின்தொடா்ந்து காரில் வந்த சுந்தரபாண்டியன் தரப்பினா், இருவரையும் தாக்கி கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் வரககுமாா் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, காரை விரட்டிச் சென்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மடக்கிப் பிடித்தனா். பின்னா், கோபிநாதனையும், ஓம் பிரகாஷையும் மீட்ட காவல் துறையினா், கடத்திச் சென்ாகச் சுந்தரபாண்டியன், மதுரை செக்கானூரணியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (21), அஜீத்குமாா் (26), விஸ்வா (20), அருண்குமாா் (21), நேதாஜி (29) ஆகியோரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT