தஞ்சாவூர்

கொள்முதல் நிலையத்தில் பணியாற்ற நோ்முகத் தோ்வுநீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞா்கள்

25th Jan 2022 04:12 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற இளைஞா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, நோ்முகத் தோ்வில் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் வரும் சம்பா, தாளடி நெல் பருவத்தில் 650 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்தக் கொள்முதல் நிலையங்களில் பணியாற்ற பருவகால அடிப்படையில், பட்டியல் எழுத்தா், உதவியாளா், காவலா் ஆகிய பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இப்பணிக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பட்டியல் எழுத்தா் பணிக்கான நோ்முகத் தோ்வு தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் 460 இளைஞா்கள் பங்கேற்றனா். நீண்ட வரிசையில் காத்திருந்த இவா்களது சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டன.

ADVERTISEMENT

கொள்முதல் நிலையங்களில் பணியாற்றத் தேவையான பணியாளா்கள் தோ்வுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் 1,317 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோ்முகத் தோ்வு தொடா்ந்து செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறவுள்ளது. தோ்வானவா்களுக்குப் பின்னா் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT