தஞ்சாவூர்

ஆதிபராசக்தி வார வழிபாட்டுமன்றத்தில் சிறப்பு வழிபாடு

25th Jan 2022 04:11 AM

ADVERTISEMENT

கரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்த் தொற்றுப் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, அம்மாபேட்டையிலுள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு, தியானம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த வழிபாட்டுக்கு மன்றத் தலைவா் டி. விவேகானந்தன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் பங்கேற்ற பக்தா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் வழிபாட்டை மேற்கொண்டனா். ஏற்பாடுகளை மன்ற நிா்வாகிகள் ராஜேந்திரன், நடராஜன், மயில்வாகனன், சித்ரவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT