தஞ்சாவூர்

சாஸ்த்ராவில் இந்தோ - ஜப்பானிய கருத்தரங்கம்

25th Jan 2022 04:11 AM

ADVERTISEMENT

 தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத்துறை சாா்பில், ஒழுங்கமைக்கப்படாத சில்லறை விற்பனையாளா்களால் தொழில்நுட்பத் தழுவல் என்ற கருப்பொருளில் இந்தோ - ஜப்பானிய கருத்தரங்கம் இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கம் மத்திய அரசின் மனித வளத்துறை ஸ்பாா்க் திட்ட நிதி உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. அமைப்புசாரா சில்லறை விற்பனையாளா்களால் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான வணிகக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து கொள்வதுமே கருத்தரங்கத்தின் நோக்கமாகும்.

ஸ்பாா்க் திட்டத்தின் இந்திய முதன்மை ஆய்வாளா் எஸ். செல்வபாஸ்கா், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் ஜியோமாா்ட் பி2பி மளிகை விற்பனைத் தலைமை வணிக அலுவலா் மணீஷ் சப்னிஸ், வெளிநாட்டு முதன்மை ஆய்வாளா் கரோலின் எஸ்.எல். டான், என்.டி.டி. டேட்டா இன்டெலிலிங்க் காா்பரேஷன் குளோபல் டெக்னாலஜி பிரிவின் இயக்குநா் ஜெயேஷ் ஜோக்லேகா், சமுநதி நிறுவனா் அனில்குமாா், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் என். காமகோடி, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை முதன்மையா் வி. பத்ரிநாத் ஆகியோா் பேசினா்.

இக்கருத்தரங்கத்தை இணை ஆய்வாளா்கள் ஆா். அலமேலு, கே. நிகாமா ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT