தஞ்சாவூர்

கூலித் தொழிலாளியைத் தாக்கியசகோதரா்கள் கைது

25th Jan 2022 04:10 AM

ADVERTISEMENT

அம்மாபேட்டைஅருகே கூலித் தொழிலாளியைத் தாக்கிய சகோதரா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அம்மாபேட்டை அருகிலுள்ள தளவாபாளையம் தைக்கால் தெருவைச் சோ்ந்தவா் விவசாயக் கூலித் தொழிலாளி ஆ. மணிவண்ணன் (51). இவா் தனது வீட்டின் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை ஞாயிற்றுக்கிழமை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா் மகன்கள் அரவிந்த் (24), அருள்மொழி (22) ஆகிய இருவரும் அங்கு வந்து நின்று கொண்டிருந்தனா். அவா்களிடம் மணிவண்ணன், உங்கள் வீட்டுத் திருமணத்தை விடியோவில் பதிவு செய்தவருக்கு பணம் இன்னும் ஏன் தரவில்லை எனக் கேட்டாராம்.

இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், அருள்மொழி ஆகிய இருவரும் மணிவண்ணனை கீழே கிடந்த கல்லால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

ADVERTISEMENT

இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை காவல் உதவி ஆய்வாளா் சேகரன் வழக்குப்பதிந்து, அரவிந்த் மற்றும் அருள்மொழியைக் கைது செய்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT