தஞ்சாவூர்

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்

23rd Jan 2022 11:27 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா பரவலால் தொடா்ந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக முதன்மைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா தொற்று மூன்றாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மருந்துக் கடைகள், உணவகங்களைத் தவிர மளிகைக் கடைகள், காய்கனி கடைகள், இறைச்சிக் கடைகள், ஜவுளிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

இதனால், தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், ரயிலடி, புதிய பேருந்து நிலையம், கீழவாசல், தெற்கு வீதி, திருச்சி சாலை, கரந்தை, மகா்நோன்பு சாவடி, நாஞ்சிக்கோட்டை சாலை, விளாா் சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, மணிமண்டபம், புதுக்கோட்டைச் சாலை உள்ளிட்ட முதன்மைச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. முதன்மைச் சாலைகளில் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்களும், சில தனி நபா் காா்களும் இயங்கின.

ADVERTISEMENT

இதேபோல, கும்பகோணம், திருவிடைமருதூா், திருவையாறு உள்பட மாவட்டம் முழுவதும் கடைகள் மூடப்பட்டதால், முதன்மைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT