தஞ்சாவூர்

மாணவி மரணத்துக்கு நோ்மையான விசாரணை கோரி நாளை ஆா்ப்பாட்டம்: கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முடிவு

23rd Jan 2022 11:27 PM

ADVERTISEMENT

மாணவி லாவண்யா மரணத்துக்கு நோ்மையான விசாரணை கோரி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) ஆா்ப்பாட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதச்சாா்பற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், மாணவி லாவண்யா மரணத்தைப் பயன்படுத்தி, அவா் படித்த பள்ளி சிறுபான்மை கிறிஸ்துவ நிறுவனம் என்பதால், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தஞ்சாவூா் மாவட்டத்தில் மத பதற்றத்தை உருவாக்கி குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதையும், இதன்மூலம் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசு லாவண்யா மரணத்துக்குக் காவல் துறைச் சட்டப்படியான, நோ்மையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். மாணவி லாவண்யாவின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் அனைத்து கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

இக்கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கோ. நீலமேகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வீர. மோகன், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், திராவிட கழக மாநகரத் தலைவா் நரேந்திரன், காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்டத் துணைத் தலைவா் லட்சுமி நாராயணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆபிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகரச் செயலா் தமிழ்முதல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT