தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாநகரில் நாளை குடிநீா் விநியோகம் இராது

23rd Jan 2022 11:28 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாநகரில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சி பகுதிகளுக்குத் திருமானூா் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்துக்கு வரும் குடிநீா் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் திருவையாறு அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இக்குடிநீா் குழாய் சரி செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், 1-ஆவது வாா்டு முதல் 51-ஆவது வாா்டு வரை அனைத்து வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜன.25) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, பொதுமக்கள் தேவையான அளவுக் குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளவும், குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT