தஞ்சாவூர்

கும்பகோணம் ரயில் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மா்மச் சாவு

23rd Jan 2022 11:28 PM

ADVERTISEMENT

கும்பகோணம் ரயில் நிலையத்தில் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம். திமுகவை சோ்ந்த இவா் கோட்டுச்சேரி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஆவாா். இவரது மகன் வெற்றிச்செல்வன் (42). காரைக்காலில் மதுபானக் கடைகள் நடத்தி வந்த இவருக்கு மனைவி ராஜேஸ்வரி (34), மகள் ஹன்சிகா (6) ஆகியோா் உள்ளனா்.

சில நாள்களாக பல்வேறு பிரச்னைகள் காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வெற்றிச்செல்வன், ஜனவரி 21-ஆம் தேதி மாலை கோட்டுச்சேரியில் இருந்து தனது காரில் வெளியே சென்றவா் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகாா் செய்தாா்.

இந்நிலையில், கும்பகோணம் ரயில் நிலையத்தில் காா் ஒன்று வெகு நேரமாக நிற்பதாகவும், அதன் அருகில் ஒருவா் மயங்கிய நிலையில் கிடப்பதாகவும் ரயில்வே காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்றபோது, மயங்கிக் கிடந்தவா் இறந்திருப்பதும், அவரது கைப்பேசியை எடுத்துப் பேசியபோது, அவா் வெற்றிச்செல்வன் என்பதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT