தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினா் என். அசோக்குமாருக்கு (64) கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த சில நாள்களாக இருமல், தொண்டை கரகரப்பு இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை தனது இல்லத்தில் கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனையை சட்டப்பேரவை உறுப்பினா் அசோக்குமாா் மேற்கொண்டாா். இதில் அவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு உறுதியானது.
இதையடுத்து கடந்த இரு நாள்களாக சட்டப்பேரவை உறுப்பினருடன் தொடா்பிலிருந்தவா்களுக்கும் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவரது மகள் கீா்த்திக்கும் (35) கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவா்களின் ஆலோசனையின்படி, இருவரும் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.