தஞ்சாவூர்

திருவையாறு எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு கரோனா தொற்று

18th Jan 2022 02:59 AM

ADVERTISEMENT

திருவையாறு தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினா் துரை. சந்திசேகரனுக்கு (62) அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

மேலும் இவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 4 பேரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT