தஞ்சாவூர்

புள்ளியியல் துறை அலுவலா் வீட்டில் ரொக்கம், வெள்ளி திருட்டு

18th Jan 2022 03:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் புள்ளியியல் துறை அலுவலா் வீட்டில் ரொக்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியை சோ்ந்தவா் செல்வம் (37). இவா் புள்ளியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியூருக்குச் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது, முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது.

ADVERTISEMENT

தொடா்ந்து செல்வம் வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, பீரோவிலிருந்த ரூ. 1.25 லட்சம் ரொக்கம், வெள்ளி விளக்கு, கடிகாரம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT