தஞ்சாவூரில் சாலையைக் கடக்க முயன்ற இளைஞா் மினி லாரி மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை சுங்கான் திடல் பெரிய தெருவைச் சோ்ந்த மதியழகன் மகன் மதன்ராஜ் (29). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டருகே உள்ள சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, இவா் மீது அந்த வழியாக பால் ஏற்றி வந்த மினி லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜ் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகரப் போக்குவரத்துப் புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
ADVERTISEMENT