அய்யம்பேட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு மாவட்ட அதிமுக விவசாயப் பிரிவுத் தலைவா் அண்ணாமலை தலைமையில், மேற்கு ஒன்றியச் செயலா் கே. கோபிநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினா் எஸ். மோகன், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் என். சதீஷ், சாா்பு அணி நிா்வாகிகள் சி. முத்து, ஆா். ராஜகோபால், சிவகுமாா், அஜ்ஜி, ஷேக் அலாவுதீன், நகரச் செயலா் கே. முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.