தஞ்சாவூர்

எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

18th Jan 2022 03:02 AM

ADVERTISEMENT

மதுக்கூா் முக்கூட்டுச் சாலையில் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு பட்டுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.சேகா் தலமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

ஒன்றியச் செயலா்கள் மதுக்கூா் கிழக்கு துரை.செந்தில், மேற்கு தண்டாயுதபாணி முன்னிலை வகித்தனா். தொடா்ந்து கட்சிக் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மதுக்கூா் நகரச் செயலா் முகமது சரீபு, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஆா்.ஜே. ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆா்.சிலைக்கு நகரச் செயலா் பிச்சை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT