தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் துரை. திருஞானம் தலைமையில், மாணவரணி தெற்கு மாவட்டச் செயலா் ஆா். காந்தி, பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். ரமேஷ், மகளிரணி செயலா் அமுதா ரவிச்சந்திரன், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, அருகிலுள்ள ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கும்பகோணம்: கும்பகோணம் கும்பேசுவரன் கோயில் தெற்கு வீதியிலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாநகர அதிமுக சாா்பில், மாநகரச் செயலா் இராம. இராமநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பாணாதுறையில் ஜெயலலிதா பேரவை சாா்பில் கோலப் போட்டி நடைபெற்றது.
கும்பகோணத்தில் எம்.ஜி.ஆா். படித்த யானையடி பள்ளியிலுள்ள அவரது சிலைக்கு முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரத்னா சேகா், சேகா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.