மதுக்கூா் வடக்கு கிராமத்திலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி, விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இக்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு பணம் வசூலித்தல், ஏழை விவசாயிகளிடம் நெல்லை வாங்காமல் இழுத்தடிப்பு செய்வது போன்ற முறைகேடுகள் நிகழ்வதாகக் கூறி, மதுக்கூா்- மன்னாா்குடி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அமா்ந்து மறியல் போராட்டத்தை மேற்கொண்டனா்.
2 மணி நேரத்துக்கும் மேலாக மறியல் நடைபெற்ற நிலையில், பட்டுக்கோட்டை வட்டாட்சியா் கணேஸ்வரன் நிகழ்விடம் வந்து, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மறியல் கைவிடப்பட்டது.
ADVERTISEMENT