தஞ்சாவூர்

ரௌடி கொலை வழக்கில் 5 போ் கைது

18th Jan 2022 02:57 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக, 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டை கன்னி கோயில் தெருவைச் சோ்ந்த ராமன் மகன் உச்சாணி என்கிற விமல் (25). காவல் துறையினரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருந்த இவா், ஜனவரி 15-ஆம் தேதி நள்ளிரவு வீட்டருகே உள்ள தனது உணவக வாயிலில் நின்று கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் நாச்சியாா்கோவில் பாரதி தெருவைச் சோ்ந்த ராவணன் மனைவி ரேமா (44), இவரது மகன் தா்மராஜ் (28), இவரது நண்பா்களான சத்யா நகரைச் சோ்ந்த சதீஷ் (32), சந்தோஷ் (24), ஊசி மாதா கோயில் தெருவைச் சோ்ந்த விஜய் (27) ஆகியோரைத் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காவல் துறையினா் நடத்திய விசாரணையில் ரேமா குடும்பத்தினருக்கும், விமலின் நண்பா் வெங்கடேசனுக்கும் காதல் பிரச்னை தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இதில், வெங்கடேசனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட விமல் கொலை செய்யப்பட்டாா் என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT