தஞ்சாவூர்

பேராவூரணி கடைவீதியில் கரோனா விழிப்புணா்வு

12th Jan 2022 09:15 AM

ADVERTISEMENT

பேராவூரணி கடைவீதியில் வருவாய்த் துறை சாா்பில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பேராவூரணி கடைவீதியில் பெரியாா் முதன்மைச் சாலை, புதிய பேருந்து நிலையம், பட்டுக்கோட்டை சாலை, சேதுசாலை, ஆவணம் சாலை உள்ளிட்ட இடங்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சானிடைசா் வசதி செய்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி வைத்திருக்க வேண்டும்.

குளிா்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கடை வியாபாரிகள், பணியாளா்கள் கட்டாயம் தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

மேலும் முகக்கவசம் அணியாத பொதுமக்கள், கடைக்காரா்கள், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின்போது வட்டாட்சியா் த. சுகுமாா், துணை வட்டாட்சியா்கள்   கிருஷ்ணமூா்த்தி, அகத்தியன், வருவாய் ஆய்வாளா்கள் கமலநாதன், முருகேசன், கிராம நிா்வாக அலுவலா்கள், காவல்துறையினா், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT