கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில், கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடாழ்வாா் அச்சிடப்பட்ட கொடி மங்கள இசை முழங்க ஏற்றப்பட்டது. அப்போது, கொடிமரம் அருகே சாரநாயகி தாயாருடன் சாரநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தாா்.
தொடா்ந்து வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவில், நாள்தோறும் பெருமாளும், தாயாரும் படிச்சட்டங்களில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெறவுள்ளது.
விழாவின் முக்கியமாக 19-ஆம் தேதி நிலைத் தேரோட்டமும், 26-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு உற்ஸவப் பெருமாள் பஞ்ச லட்சுமிகளுடன் தெப்பத்தில் எழுந்தருளும் தெப்ப உற்ஸவமும் நடைபெறவுள்ளன.
ADVERTISEMENT