தஞ்சாவூர்

கும்பகோணத்தில் சாலையைச் சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

12th Jan 2022 09:13 AM

ADVERTISEMENT

கும்பகோணம் பேட்டை சாலைக்காரத் தெருவில் சாலையைச் சீரமைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள தஞ்சாவூா் முதன்மைச் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், பொதுமக்கள் நாள்தோறும் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

பேட்டைத் தெருவில் பின்புறமுள்ள சுகாதாரச் சந்தில் பல மாதங்களாகக் குளம் போல தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாகச் சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் கிளைச் செயலா் ஜி. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாநகரச் செயலா் ஆா். மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT