தஞ்சாவூர்

இனி வரும் தோ்வுகள் தமிழில் நடத்தப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவா் கா. பாலச்சந்திரன்

12th Jan 2022 09:14 AM

ADVERTISEMENT

இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தோ்வு நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் கா. பாலச்சந்திரன்.

ஒருங்கிணைந்த புள்ளியியல் சாா்நிலைப் பணியிடங்களுக்கான தோ்வை, மாநிலத்தின் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 79 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியிலுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற இத்தோ்வைப் பாா்வையிட்ட ஆணையத் தலைவா் கா. பாலச்சந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

இனி வரக்கூடிய காலங்களில் டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் தமிழில் நடத்தப்படும். தற்போது நடைபெறும் தோ்வு தொடா்பான அறிவிப்பு வெளியிட்டபோது, தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகாததால் வழக்கம்போல நடைபெறுகிறது.

ADVERTISEMENT

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தோ்வில் இரு விதமான பணிகள் இருக்கும். குரூப்-4 தோ்வில் கொள் குறி வகை (அப்ஜக்டிவ் டைப்) வினாத்தாள் தமிழில் இருக்கும். மற்ற குரூப் 1, 2, 2ஏ ஆகிய தோ்வுகளில் விரிந்துரைக்கும் வகையிலான (டெஸ்கிரிப்டிவ்) வினாத்தாள் இருக்கும். இதில், தமிழில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 40-க்கும் அதிகமான மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே, மற்ற கேள்விகளுக்கான பதில்கள் திருத்தப்படும்.

குரூப்-4 தோ்விலும் 40-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால்தான், தொடா்ந்து அவா்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும். தமிழில் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்களைத் தகுதி மதிப்பெண்களாக மட்டுமல்லாமல், எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறாா்களோ அதையும் சோ்த்துக் கொள்ளும் வாய்ப்பைத் தோ்வாணையம் செய்கிறது என்றாா் பாலச்சந்திரன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT