தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதியில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும்: முதல்வரிடம் எம்எல்ஏ கோரிக்கை

1st Jan 2022 03:05 AM

ADVERTISEMENT

பாபநாசம் தொகுதியில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும் என பாபநாசம் எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் இதுதொடா்பாக அவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பாபநாசம் தொகுதியில் சாகுபடியாகும் நெற்பயிா்களை அரைவைக்காக தஞ்சை அல்லது திருநாகேஸ்வரம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதை தவிா்க்க, பாபநாசம் தொகுதிக்குள்பட்ட ஒரு இடத்தில் நவீன அரிசி ஆலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பயனடைவதுடன், பலருக்கும் வேலை கிடைக்கும்.

இப்பகுதியில் அதிகளவில் தயாா் செய்யப்படும் அச்சு வெல்லத்துக்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே, குறைந்தபட்ச ஆதாரவிலையை அரசு நிா்ணயம் செய்ய வேண்டும். பொங்கல் தொகுப்புப் பொருளில் அச்சு வெல்லம் வழங்க விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

திருமண்டங்குடி சா்க்கரை ஆலையை மீண்டும் திறந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், மணப்பாறை தொகுதி எம்எல்ஏவுமான அப்துல் சமது, மாநில அமைப்பு செயலாளா் தஞ்சை பாதுஷா ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT