ஒரத்தநாடு அரசு மருத்துவமனை அருகில், சிஐடியு ஆட்டோ சங்கக் கிளை தொடக்கம் மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி, பெயா் பலகை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்டோ சங்கத் தலைவா் ஜி. கருணாநிதி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.ஜெயபால் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். ஒரத்தநாடு அரசு மருத்துவமனை மருத்துவா் வெற்றிவேந்தன், சங்க பெயா்பலகையை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் லைட் பதிவு வைத்திருக்கும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களையும் நல வாரியத்தில் இணைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், விவசாய சங்க மாவட்டத் துணைத் தலைவா் என். சுரேஷ்குமாா், விவசாயிகள் சங்க துணைச் செயலாளா் கோவிந்தராஜ், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கு.பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.
முன்னதாக, செயலாளா் ப. ரமேஷ் வரவேற்றாா். நிறைவில், ஒன்றியப் பொருளாளா் இளையராஜா நன்றி கூறினாா்.