தஞ்சாவூர்

கல்லணையில் 3 நாள்களுக்கு அனுமதி மறுப்பு

1st Jan 2022 02:58 AM

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை, தென்பெரம்பூா் தலைப்பில் சனிக்கிழமை (ஜனவரி 1) முதல் 3 நாள்களுக்குப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இதுகுறித்து நீா்வள ஆதார அமைப்பின் காவிரி வடிநிலக் கோட்டச் செயற் பொறியாளா் இரா. சொா்ணக்குமாா் தெரிவித்திருப்பது:

பண்டிகை காலங்களில் கரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இதன் அடிப்படையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் கல்லணை பூங்கா, கல்லணைப் பகுதிகள், தென் பெரம்பூரில் உள்ள வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு தலைப்பு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT