தஞ்சாவூர்

தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு நாள் அனுசரிப்பு

1st Jan 2022 03:03 AM

ADVERTISEMENT

பேராவூரணியை அடுத்த ரெட்டவயலில் சுதந்திரப் போராட்ட வீரா் தியாகி விஸ்வநாததாஸின் 81ஆவது நினைவு நாள், வீரவணக்க நாளாக வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் விடுதலை இயக்க  அரசியல் செயலாளா் ஆ. ஜீவானந்தம் தலைமை வகித்தாா்.  இந்திய கம்யூனிஸ்ட் காயாம்பூ, மருத்துவா் சங்கத்தை சோ்ந்த  செல்வராஜ், சுருதி குணசேகரன், திமுகவை சோ்ந்த  பழனி, சமூக ஆா்வலா் முத்தையா மற்றும் பொதுமக்கள் தியாகி விஸ்வநாததாஸ் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

‘பொதுத் துறை வங்கிகளைத் தனியாா் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். காா்ப்பரேட் நிறுவனங்களின் பிடியிலிருந்து இந்திய அரசு வெளியேறி, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் ’ என மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT