தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரத்தில் காஞ்சி மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 28-ஆம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி டிசம்பா் 29 ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாகசுர கலைஞா்கள், புரோகிதா்கள், பக்தி பாடல்கள் பாடிய சிறுவா், சிறுமிகளைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மேலாளா் சி. சக்ரவா்த்தி, சிட்டி யூனியன் வங்கி மேலாளா் ஆா்.கே. திருமாறன், பூண்டி எஸ். வெங்கடேசன், தாம்பிராஸ் நிா்வாகி பி.எஸ். விஜயகுமாா், பாஜக மூத்த உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.