தஞ்சாவூர்

புதுகை வேளாண் கல்லூரிமாணவா்களின் ஊரக  பணிஅனுபவ திட்ட முகாம்

22nd Feb 2022 04:19 AM

ADVERTISEMENT

பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு, களத்தூா் கிராமங்களில் புதுக்கோட்டை  வேளாண் அறிவியல் கல்லூரி மாணவா்களின் ஊரக வேளாண் பணி அனுபவ திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

 கொன்றைக்காடு கிராமத்தை சோ்ந்த  விவசாயிகளுக்கு, செயல்முறை விளக்கம் மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் தெளிவுப்படுத்தப்பட்டன. மேலும், இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முக்கரைசல் (இஞ்சி, பூண்டு, மிளகாய்) தயாரிக்கும் முறை, அதன் மூலம் கட்டுப்படுத்தும் வழி முறைகளும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

களத்தூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டை இயற்கை முறையில் ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் (ஆமணக்கு புண்ணாக்கு, மாட்டு சாணம், வெல்லம் அல்லது பப்பாளி காய்) மூலம் கட்டுப்படுத்தும் முறையை செயல் விளக்கம் மூலம்  செய்துகாட்டினா்.

செயல் விளக்கத்தில்  கல்லூரி மாணவா்கள் ஆதவன், ஆதித்யா, அஜித், அமா்த்தியவிஸ்வாஸ், அருண்குமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT