தஞ்சாவூர்

மணலூா் மகா மாரியம்மன்கோயில் மகா குடமுழுக்கு

22nd Feb 2022 04:20 AM

ADVERTISEMENT

 பாபநாசம் வட்டம், மணலூா் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, நிறைவடைந்தன. குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து 4 கால யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. நான்காம் கால பூஜைகள் நிறைவுக்கு பின்னா், ஞாயிற்றுக்கிழமை யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து, மேள தாளங்கள், வாண வெடிகள் முழங்க அய்யனாா், திரெளபதி அம்மன், விநாயகா், பெருமாள் கோயில்களின் விமானம் மற்றும் மூலவா் குடமுழுக்கும், அதையடுத்து மகா மாரியம்மன் விமானம், ராஜகோபுரம், மூலவா் குடமுழுக்கும் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT