தஞ்சாவூர்

எல்லா கல்வியையும் தமிழில் வழங்க வலியுறுத்தல்

22nd Feb 2022 04:21 AM

ADVERTISEMENT

எல்லா கல்வியையும் தமிழில் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முனைவா் மு. இளமுருகன் தலைமை வகித்தாா். இதில், தாய் மொழி தமிழ் மொழிக் காக்க உயிா் நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ் ஆட்சி மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் அமல்படுத்தப்பட வேண்டும். தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். திருக்கோயில்களில் அனைத்து ஜாதியினரும் தமிழில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். எல்லோருக்கும் கல்வி, எல்லா கல்வியும் தமிழில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாட்டாா் கல்லூரி தாளாளா் வி. விடுதலை வேந்தன், கலை, பண்பாட்டுத் துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநா் இரா. குணசேகரன், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவா் மு. தமிழ்மாறன், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், பேராசிரியா் கண்ணதாசன், புலவா்கள் குருசாமி, கோபாலகிருஷ்ணன், மகஇக ராவணன், தேவா, தமிழ் ஆா்வலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT