தஞ்சாவூர்

லாரி மோதியதில்விவசாயி பலி

22nd Feb 2022 04:18 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள சில்லத்தூரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (46). விவசாயி. இவா் மோட்டாா் சைக்கிளில் ஒரத்தநாடு - வல்லம் சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். திருக்கானூா்பட்டி நான்கு சாலை பகுதியில் சென்றபோது, இவா் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT