கும்பகோணம் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி அளவில் மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தை அதிகரிக்கவும், ஆய்வுத் திறனை மேம்படுத்தவும் ரோபோட்டிக் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையிலான நவீன உபகரணங்களுடன் அமைக்கப்படும் இந்த அடல் டிங்கா் ஆய்வகம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள பள்ளி அளவில் முதல் முறையாக காா்த்தி வித்யாலயா பள்ளியில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தை மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
விழாவில் பெருமாண்டி ஊராட்சித் தலைவா் ஆா்.கே. பாஸ்கா், மாவட்ட கவுன்சிலா் ஜி.கே.எம். ராஜா, கொரநாட்டு கருப்பூா் முன்னாள் தலைவா் பி. அபிராமி சுந்தரம், கொரநாட்டுக் கருப்பூா் ஊராட்சி மன்றத் தலைவா் சுதா அம்பிகாபதி, மாவட்ட பிரதிநிதி கரிகாலன், பள்ளி தாளாளா் காா்த்திகேயன், பள்ளி முதல்வா் அம்பிகாபதி, காா்த்தி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன், பள்ளி முதல்வா் எம். ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.