தஞ்சாவூர்

பூஜை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

17th Feb 2022 01:56 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: திருவையாறு அருகே கல்யாணபுரம் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலுக்குக் குடை, பூஜை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தெலங்கானாவில் பிரம்மாண்டமான ராமானுஜா் சிலையை பிரதமா் மோடி திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கல்யாணபுரம் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலுக்குக் குடையும், பூஜை பொருள்களையும் பாஜக முத்த உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன், அனைத்து இந்திய தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலா் தில்லி இரா. முகுந்தன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT