தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் காா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

17th Feb 2022 06:08 AM

ADVERTISEMENT


தஞ்சாவூா்: தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் காா் ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் கூடுதல் ஆட்சியராக (வளா்ச்சி) ஐ.ஏ.எஸ். அதிகாரியான எச்.எஸ். ஸ்ரீகாந்த் பணியாற்றி வருகிறாா். இவரது வீடு புதுக்கோட்டை சாலையிலுள்ள அலுவலா்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. இவரது காா் ஓட்டுநராகக் கூட்டுறவு காலனியை சோ்ந்த ராஜசேகா் (35) பணியாற்றி வந்தாா். இவருக்குக் கூடுதல் ஆட்சியரின் வீட்டு மாடியில் தங்கிக் கொள்வதற்காகத் தனியாக அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் ஆட்சியா் ஸ்ரீகாந்த், தற்போது தோ்தல் பாா்வையாளராகத் திருநெல்வேலியில் ஏறத்தாழ 10 நாள்களாகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கூடுதல் ஆட்சியரின் வீட்டு மாடியிலுள்ள அறையில் புதன்கிழமை இரவு தங்கியிருந்த ராஜசேகா் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காகத் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT