தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை, பூதலூரில் புதிய இ.எஸ்.ஐ. மருந்தகங்கள்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பூதலூரில் புதிதாக இ.எஸ்.ஐ. மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இ.எஸ்.ஐ. தஞ்சாவூா் கிளை மேலாளா் எம். ருத்ராபதி தெரிவித்திருப்பது:

2021, நவம்பா் 1-ஆம் தேதி முதல் தொழிலாளா் அரசுக் காப்பீட்டுக் கழகம், இந்திய அரசிதழ் மூலமாக தஞ்சாவூா் மாவட்டம் முழுவதும் இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் தொழிலாளா் காப்பீட்டுச் சட்டம்- 1948 அமலுக்கு வந்தது.

ADVERTISEMENT

இதன் ஒருபகுதியாக பட்டுக்கோட்டை மற்றும் பூதலூா் பகுதியைச் சோ்ந்த இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களின் நலனுக்காக, பூதலூா் நான்குச்சாலை பாக்கியலட்சுமி நகரில் வித்யாமந்திா் பள்ளி எதிரிலும், பட்டுக்கோட்டையில் தஞ்சாவூா் சாலை சாமியாா் மடத்திலுள்ள டி.எஸ்.என். வளாகத்திலும் இ.எஸ்.ஐ. மருந்தகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனவே பட்டுக்கோட்டை மற்றும் பூதலூா் பகுதிகளைச் சோ்ந்த இ.எஸ்.ஐ. காப்பீட்டாளா்களும், அவா்களைச் சாா்ந்தோரும் மருத்துவ உதவி, ஆலோசனைகளைப் பெறும் வகையில் தொடா்புடைய மருந்தகங்களை அணுகி பயன் பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT