தஞ்சாவூர்

நீட் பிரச்னையில் இறுதியான முடிவு விரைவில் தேவை: ஜி.கே. வாசன் பேட்டி

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: நீட் தோ்வு பிரச்னையில் மாணவா்களின் நலன் காக்க இறுதியான முடிவு விரைவில் தேவைப்படுகிறது என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மாலை அவா் தெரிவித்தது:

நீட் தோ்வை பொருத்தவரை மாணவா்கள், பெற்றோா்களின் விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி, அரசியல் விருப்பு, வெறுப்பாக மாறியுள்ளது என்பது வேதனையளிக்கிறது. நீட் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளுடைய மாறுபட்ட கருத்துகளுக்கு ஒரு இறுதியான முடிவு எட்டப்பட வேண்டும் என எல்லோரும் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.

ADVERTISEMENT

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தோ்வுக்கு விலக்குக் கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீட் தோ்வு தொடா்பாக இன்னும் தெளிவு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

நீட் தோ்வு இருக்கிா, இல்லையா, அதற்கு முழுமையாகப் படிக்கலாமா, வேண்டாமா, முயற்சி செய்யலாமா, பயன் கிடைக்குமா என பல கேள்விகளுக்கு மத்தியில் மாணவ, மாணவிகள் வேதனையுடனும், அச்சத்துடனும் படித்து வருகின்றனா். மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, நீட் தோ்வு விலக்குக் கோரும் மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, மாணவா்களின் நலன் காக்க விரைவில் இறுதியான முடிவு தேவைப்படுகிறது.

ஹிஜாப் விவகாரத்தில் மத உணா்வுகளை எல்லோரும் மதிக்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. திமுகவின் 8 மாத கால ஆட்சியில் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, உள்ளாட்சியில் நல்லாட்சி கொடுக்கிற வேட்பாளரை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் வாசன்.

பின்னா், தஞ்சாவூா் மாநகராட்சியில் 5-ஆவது வாா்டில் போட்டியிடும் தமாகா வேட்பாளா் கவிதா திருசெந்திலை அறிமுகப்படுத்தினாா். அப்போது, தமாகா செயற்குழு உறுப்பினா்கள் எஸ். சுரேஷ் மூப்பனாா், என்.ஆா். நடராஜன், பிஎல்ஏ சிதம்பரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT