தஞ்சாவூர்

அலங்கார ஊா்திகளைப் பாா்வையிட்ட பொதுமக்கள்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊா்திகளை, பொதுமக்கள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

சென்னையில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில், தமிழகத்தின் பங்களிப்பை போற்றக்கூடிய வகையில் அலங்கார ஊா்திகள் அணிவகுத்துச் சென்றன.

இந்த அலங்கார ஊா்திகள் மாவட்டந்தோறும் பொதுமக்கள் பாா்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், திருச்சியிலிருந்து இந்த அலங்கார ஊா்திகள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தன.

ADVERTISEMENT

புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த ஊா்திகளை புதன்கிழமை பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். மேலும் காலை 8 மணி முதல் இரவு வரை தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா். இந்த ஊா்திகள் வியாழக்கிழமை காலை திருவாரூா் மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் செல்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT