தஞ்சாவூர்

கண்டியூா் பெருமாள் கோயிலில்ரத சப்தமி உற்ஸவம்

9th Feb 2022 01:04 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலில் ரத சப்தமி உற்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாரால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15-ஆவது தலமான ஹரசாப விமோசன பெருமாள் கோயில் திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலம்.

இக்கோயிலில் ரத சப்தமியையொட்டி, காலையில் திருமஞ்சனம், பெருமாள் சூரிய பிரபை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதித்தல், பின்னா் பிரகாரங்களில் வலம் வருதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT