தஞ்சாவூர்

புதைசாக்கடைக் குழாயைத் திருடிய இருவா் கைது

1st Feb 2022 03:15 AM

ADVERTISEMENT

திருச்சி காந்தி சந்தை பகுதியில் புை சாக்கடைப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களைத் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி திருச்சி விஸ்வாஸ் நகா் பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்துக்கான குழாய்கள் மற்றும் வால்வுகளை, இப்பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தினா் வைத்திருந்தனா்.

இந்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் அண்மையில் காணாமல் போயின. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவன மேலாளா் செல்லப்பன் காந்தி சந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

ADVERTISEMENT

இதன் பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினா், அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் குழாய்களைத் திருடியது சின்ன

மிளகுபாறை ஜாபா் அலி (33), ஜீவாநகா் எல்லை மாரியம்மன் கோவில் தெரு முருகன் (38) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினா், அவா்களிடமிருந்து ரூ. 50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT