மணப்பாறையில் கஞ்சா விற்ாக இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ரகசிய தகவலின் அடிப்படையில், மணப்பாறையில் காவல்துறையினா் திங்கள்கிழமை நடத்திய தணிக்கையில், மோா்குளம் பகுதியில் நாகராஜ் (40), தஞ்சாவூா் மணல்மேடு குமாா் (48) ஆகியோா் கஞ்சா விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த காவல்துறையினா், 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
ADVERTISEMENT